Sunday, December 5, 2010

Our visit to the Pudukottai Orphange - Mr. Natarajan

அன்புடையீர் வணக்கம்
நான் உங்களது புதுகோட்டை பயணம் தொடர்பான கடிதம் படித்தேன். நன்றாக
இருந்தது. குழந்தைகள்,இல்லத்தின் நிலைமை இரத்தின சுருக்கமாக
சொல்லப்பட்டுள்ளது. நேரில் பார்த்தது போன்ற எண்ணம் ஏற்பட்டது. எல்லா
ஆதரவற்ற இல்லக் குழந்தைகளும் உணர்வு நிலையில்  தாங்கள் கூறியுள்ளது போல்
தான் இருப்பார்கள். நாம் இப்போது குழந்தைகளின் உணர்வுத்தேவைகளுக்கு
அதிகம் முக்கியத்துவம்  தராமல் அவர்களின் இயல்புத் தேவைகளான நிலையான
இருப்பிடம், உணவு, உடை, ஆகியவை கிடைக்க ஆக்கபூர்வ நடவடிக்கை எடுக்க
வேண்டும் என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இயல்புத் தேவைகள் சரிவர
பூர்த்தியாகும் பொழுது நிச்சயம் குழந்தைகளின் மனநிலை ஆரோக்கியமாக
இருக்கும் என்பது எனது கருத்தாகும்.
மேலும் தங்களின் நூலகத்திட்டம் சிறப்பனதாகும். நல்ல புத்தகங்களை
படிப்பதன் மூலம் சிறந்த சமூக நோக்கமுள்ள மனிதர்களை உருவாக்க முடியும்.
தன்னலமற்ற சமூக நோக்கமுள்ள மனிதர்கள் மூலம் சிறந்த சமுதாயத்தை உருவாக்க
முடியும். அந்த வகையில் தங்களின் நூலகத்திட்டம் உண்மையான சமுதாய
புரட்சிக்கான ஒரு சிறு விதையாகும்.
தங்களின் குறுஞ் செய்தியில் இத்திட்டத்திற்கான பெயர்களை
பட்டியலிட்டிருந்தீர். அதனுடன் “ அறிவுச் சோலை” என்ற பெயரையும்
சேர்த்துக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.
அன்புடன்
இரா.நடராஜன்.

No comments:

Post a Comment